Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்துத் துறையின் மெத்தனம்… பிரேக் பிடிக்காத அரசு பேருந்து… பயணிகளின் நிலை..?

கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது.

கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. அதிர்ந்து போன ஓட்டுநர் பேருந்தை விட்டு குதித்து விட்டார்.

இதன் காரணமாக பேருந்து, ஓட்டுனர் இல்லாமல் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பினர். ஓட்டுநர், நடத்துனர், சுமார் 15 பயணிகள் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். பேருந்தின் ஓட்டுனர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரேக் பிடிக்காத அரசு பேருந்தின் நிலை, போக்குவரத்து துறையின் பராமரிப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

Categories

Tech |