டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரி செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புகார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரையும் நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது டெல்லியில் இருந்து கொண்டு ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதாகியுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்று விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , தேர்தல் ஆணையம் என்பது எப்போதும் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாகும். வாக்கு இயந்திரங்கள் இருக்கின்ற அறையை எந்த காரணம் கொண்டும் திறக்க கூடாது. மறுவாக்குப்பதிவுக்கான அறிவிப்பு என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று கமல் கூறினார்.