Categories
தேசிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து காரைக்கால், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, எண்ணூர், நாகை, கடலூர் மற்றும் சென்னை போன்ற துறைமுகங்களில் 3-ம் எண் கூண்டு புயல் எச்சரிக்கை ஏற்றப் பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை மற்றும் அதற்கு மறுநாள் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |