Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வேறொரு பெண் மீது ஆசை…. கர்ப்பிணி மனைவிக்கு HIV வைரஸை செலுத்திய கணவர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் சரண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்து சரண் தன்னுடைய மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, ஆண் குழந்தை பெற்று தராததை குத்தி காட்டி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் சரணுக்கு விசாகப்பட்டினம் பகுதி சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை சரண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனால் மனைவி விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்த நிலையில், சரண் 2-வதாக கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எச்ஐவி வைரஸ் பாதித்தவரின் ரத்தத்தை தன்னுடைய மனைவியின் உடம்பில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து சிறிது நாட்கள் கழித்து சரணின் மனைவி மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் சரண் மனைவி மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தை எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சரணின் மனைவி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சரண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |