தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இங்கே என ஆட்சியா நடந்துட்டு இருக்கு ? ஷோ கட்சி ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. பின்னாடியே பத்து கேமரா போகும். இவர் நடந்துட்டு இருப்பார், கை கொடுப்பாரு. ஏன்னா அவருக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம், அந்த ஆசை எல்லாம் இப்பதான் அவரு நிறைவேற்றிட்டு இருக்காரு.
கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு, பேண்ட்டை போட்டுக்கிட்டு, ஒரு போட்டோ சூட் ஆட்சி தான் இன்னைக்கு நடந்துகிட்டு இருக்கு. இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதுதான் மக்கள் கேட்கிறார்கள். நீ டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுவதையும் யாரும் பாக்கல. இதெல்லாம் மக்கள் பார்த்து அழுத்துட்டாங்க. அப்போ கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு, எதிர்க்கட்சியாக இருந்த போது போஸ் கொடுத்தாரு.
இன்றைக்கு முதலமைச்சராக இருப்பதால் கோட்டு, ஷூட்டு போட்டுகிட்டு போட்டோ சூட் பண்ணிக்கிட்டு இருக்காரு. அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்…. ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு, துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. உங்களுக்கு மட்டும் ஒரு நிகழ்ச்சியில் பவர் கட் ஆனா, உடனே சஸ்பெண்ட் பண்ணுவீங்க.
இன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமே இல்லாமல் கஷ்டப்படுறாங்களே, எத்தனை அதிகாரிகளை நீங்கள் சஸ்பெண்ட் செஞ்சு இருப்பீங்க என்பதை இந்த தமிழக அரசு மக்களுக்கு சொல்லணும். திமுகா என்றாலே தில்லு முல்லு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது என தெரிவித்தார்.