வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவரை பார்க்க வேண்டும், கலைஞரை பார்க்க வேண்டும் என்று கேட்டார்.
உடனடியாக அவருக்கு தலைவர் இடத்தில் என்ன சூழலில் பார்க்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் இடம் கலந்து பேசி, அதற்கு பிறகு அவரிடத்தில் சொல்லி அவரும் அந்த நேரத்திற்கு வந்தார். அவர் வந்து மாடிப்படி ஏறி உள்ளே நுழையும் போதே தலைவர் அவர்கள் ஹாலில் உட்கார்ந்திருக்கிறார், உடனடியாக யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத உடல்நிலை, அந்த சூழ்நிலை அவருக்கு இருக்கிறது.
இருந்தாலும் அவர் கருப்பு துண்டை பார்த்த உடனே அடையாளம் கண்டுபிடித்து, சிரித்தார் அண்ணன் வைகோவை பார்த்து, வந்த உடனே கையை நீட்டினார். அண்ணன் வைகோ அவர்கள் ஓடி வந்து கையை பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்து விட்டார், நான் பக்கத்தில் இருந்து அழாதீங்க சமாதானப்படுத்தினேன். இன்னும் அந்த காட்சி பசுமையாக இருக்கிறது என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வேண்டுமென்று விரும்பினாரா ? விரும்பவில்லையோ எனக்கு தெரியாது. ஆனால் கூட்டணி அமைத்த இடங்களில் எல்லாம் ஒதுக்கீடு செய்யும் நேரத்தில் நான் அவரிடத்தில் உரிமையோடு சொன்னேன். உங்கள் உடல்நிலை எனக்கு முக்கியம், எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு முக்கியம். அதுமட்டுமல்ல ஒரு இடத்தில் வேட்பாளராக நின்று விட்டால், தமிழ்நாடு முழுவதும் உங்களால் சுற்றுப்பயணம் செய்ய முடியாது.
ஆனால் மாநிலங்களவையில் உங்கள் குரல் தொடர்ந்து ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிவு எப்படி வருதோ இல்லையோ எனக்கு தெரியாது, ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முடிவான முடிவு. அதனால் வெற்றி பெறுகிறோமா, இல்லையோ நீங்கள் மாநிலங்களவை உறுப்பினராக செல்லப் போகிறீர்கள். அதனால் நிச்சயமாக உறுதியாக என்னுடைய கருத்து தயவு செய்து ஏற்றுக்கொண்டு, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் மூன்று முறை உங்களுக்கு ராஜசபாவில் இடம் கொடுத்து, உங்கள் குரலை ஒலிக்க வைத்தாரோ, அதுபோல் நானும் ஆசைப்படுகிறேன் என்று சொல்லி அவரிடத்தில் கேட்டேன்.. என்னுடைய ஆசை ஏற்றுக் கொண்ட அவருக்கு அப்ப நன்றி சென்றனோ, இல்லையோ இப்போ எங்கள் அனைவரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.