Categories
உலக செய்திகள்

‘இது என் கவசம்’…. தேசிய கொடிக்கு முத்தமிட்ட பெண்…. வைரலாகும் காட்சிகள்….!!

தேசிய கொடியை பெண் ஒருவர் முத்தமிடும் காட்சியானது வெளியாகி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறிவருகின்றனர். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் அந்நாட்டு கொடிக்கு பதிலாக அவர்களின் வெள்ளைக் கொடியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலையான பிறகு கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சை நிறங்களை உடைய மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கான் தேசிய கொடியை அகற்றிவிட்டு அவர்களின் வெள்ளை கொடியை ஏற்றி வருவது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆப்கான் கொடியை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் ஆப்கானிஸ்தானில் கிழக்குமாகாண குனாரின் உள்ள அசாதாபாத் நகரில் மக்கள் கொடியை ஏந்தி ஊர்வலம் நடத்தியதற்காக தலீபான்களால் சிலர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்கான் பெண்ணொருவர் நாட்டுப்பற்று காரணமாக தேசிய கொடியை முத்தமிடும் காட்சி ஒன்று வெளியாகி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறியதில் “இதை நீக்க வேண்டாம். இந்த தேசியக் கொடியை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் இறந்த பிறகு என் மீது இதனை மரண கவசமாக போர்த்துங்கள்” என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் தலீபான்களுக்கு பயப்படாமல் ஆப்கான் தேசியக்கொடியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |