மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களை இணைக்கும் அந்த சாலைகளில் விரைவாக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தவதற்காக அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்- திருச்செந்தூர், பழனி- தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்- பவானி, அவிநாசி- மேட்டுப்பாளையம், பவானி-கரூர் போன்ற சாலைகளை 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டமானது இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளரான இறையன்பு , உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.