Categories
உலக செய்திகள்

ரஷ்ய போர்க்கப்பல்கள் அழிப்பு…. உக்ரைனில் பயங்கரமாக எரியும் துறைமுகம்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் இருக்கும் Berdyansk என்ற துறைமுகம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

ரஷ்யப் படை மேற்கொண்ட தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துறைமுகம் பயங்கரமாக எரிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறைமுகத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படைகள் Berdyansk என்ற துறைமுகத்தில் நின்ற  ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கி அழித்திருக்கின்றன.

இது மட்டுமில்லாமல் மேலும் இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் கடற்படையானது, துறைமுகத்திலிருந்து வெடிமருந்தும்  எண்ணெய் கிடங்கும் அழிக்கபட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |