Categories
தேசிய செய்திகள்

462 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிப்பு!

ஒடிசா மாநிலத்தில் 462.55 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அம்மாநில காவல் துறையினர் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.

ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டுவருவதாக அம்மாநில காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு 462.55 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.

அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு ரூ.9 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும் எனத் தெரிகிறது. இது குறித்து காவல் துறையினர் கஞ்சா சாகுபடி செய்தவர் மீது வழக்குப்பதிந்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |