விஷால் நடித்த துப்பறிவாளன் 2 பாகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் படமாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆஷியா நடிக்கிறார். நாசர் , ரகுமான் , பிரசன்னா , கௌதமி , சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். துப்பறிவாளன் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கியது.