கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள 59 பேர் டெட்டாயில் குடித்து இறந்தது உண்மையா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால், ஆப்பிரிக்காவில் ஒரு சர்ச் அருள்தந்தை அங்குள்ள மக்களுக்கு கொரோனா டெட்டாயில் குடித்தால் சரியாகிவிடும் என்று கூறி கொடுத்ததில் 59 பேர் மரணித்து விட்டதாக செய்தி ஒன்று வந்தது.
இது முற்றிலும் பொய்யான செய்தி அங்குள்ள மக்கள் டெட்டாயில் குடித்தது உண்மைதான். ஆனால் 2016இல் ஆன்டிசெப்டிக் அதிகரிக்க பயன்படும் என்று கூறி அருட்தந்தை ஒருவர் அனைவருக்கும் கொடுத்து இருந்தார். ஆனால் அதில் யாரும் மரணிக்கவில்லை. அந்த சமயத்தில் டெட்டாயிலை மக்களுக்கு கொடுத்த அருள் தந்தையும் கைது செய்யப்பட்டார்.