Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் “15 தொகுதியிலும் தனித்து போட்டி”…. தேவகவுடா.!!

 கர்நாடகாவில் 15 தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனியாக போட்டியிடும் என்று தேவகவுடா அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் அதிகமாக 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Image result for தேவகவுடா

இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா  கர்நாடகாவில் 15 தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனியாக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனுபவித்த துயரங்கள் மீண்டும் நிகழக்கூடாது என குமாரசாமி நினைப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |