தென் கொரியாவில் Esports துறை ஆன்லைன் கேம் விளையாட்டில் ஏற்பட்டுள்ள சில தளர்வுகளால் வளர்ச்சி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவில் நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் கேம் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தடையானது தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
மேலும் Esports துறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக அடுத்த ஆண்டு பங்கேற்க உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் கேமிங் துறையில் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே பலரும் பயிற்சி மையங்களுக்கு சென்று ஆன்லைன் கேமிங் திறமையை வளர்த்து வருகின்றனர்.