Categories
அரசியல் தேசிய செய்திகள்

கூட்டணி குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து…!

அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது குறித்து, சரியான நேரத்தில் பதில் அளிப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ‘ நான் என்சிபியில் தான் இருக்கிறேன். என்னை என்சிபியில் இருந்து நீக்கி விட்டார்கள்… என யாராவது சொன்னார்களா அல்லது எங்கேயாவது படித்தீர்களா ‘ எனக் கேள்வி எழுப்பினார்.

எம்எல்ஏவாக பதவியேற்றுள்ள ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்து, ‘ நாங்கள் புதிய மகாராஷ்டிராவை உருவாக்க இணைந்துள்ளோம். தற்போது பதவியேற்றுள்ள பெரும்பாலான எம்எல்ஏக்கள் அனைவரும் புதியவர்கள். மக்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறோம்’ என்றார்.

Categories

Tech |