இலங்கையில் உள்ள ஐநா தூதரகம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப அதிகார மாற்றமானது அமைதியான வழியில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி சிங்கப்பூருக்கு சென்று விட்டார். மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இலங்கையில் இருக்கும் ஐநா தூதரகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், அரசியல் சாசனத்திற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அதிகார மாற்றமானது அமைதியான வழியில் நடக்க வேண்டும்.
அரசியல் உறுப்பினர்கள் அனைவரும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நாட்டில் நிலவும் மோசமான நிலை மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றிற்கான காரணங்களை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.
இலங்கை மக்களின் விருப்பங்கள் முழுவதையும் பூர்த்தி செய்வதற்கு அரசியல் உறுப்பினர்கள் அனைவரிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்வது தான் சிறந்த வழி என்றும் தெரிவித்திருக்கிறார்.