Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வழக்கம் போல் நடப்பது நடக்கும்… உள்ளே செல்ல அனுமதி இல்லை… வருத்தத்தில் பொதுமக்கள்…!!

கொரோனா பரவல் காரணத்தினால் கோவில்களில் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணத்தினால் பல தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதில் கோவில்களில் ஊர்வலங்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்தக்கூடாது எனவும் நாள்தோறும் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் பொதுமக்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆடித் திருவிழாவையொட்டி கோவில்களில் அதிகமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என அச்சம் காரணமாக பக்தர்களின் நலன் கருதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |