Categories
அரசியல்

இந்த வாகனங்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று  பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு நிலக்கல் மற்றும் பம்பை இடையே தினசரி 200 பேருந்துகள் இயக்கப்படும். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மகர விளக்கு தினத்தன்று ஆயிரம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மாவட்டத்தில் உள்ளேயும் மாவட்ட எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அனுமதி பெற்றுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வருகின்ற பெரும்பாலானோர் அட்டிகள் மற்றும் நெடுமங்காட்டில் இருந்து வருகிறார்கள். அதேசமயம் டெம்போ மற்றும் லாரிகளில் வரும் பக்தர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றன. பாதுகாப்பான மண்டல திட்டத்தின் கீழ் கோவிலில் இருந்து 400 கிலோமீட்டர் 20 குலுக்கல் 24 மணி நேரமும் செயல்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |