Categories
தேசிய செய்திகள்

மூடப்பட்ட கோயிலுக்கு ரூ 1,38,00,000 வழங்கிய பக்தர்…!!

ராஜஸ்தானின் சன்வலியா சேத் பிரக்தியா கோயிலுக்கு பக்தர் ஒருவர் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான சன்வலியா சேத் பிரக்தியா கோயில் (Sanwaliya Seth Praktya) கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கிறது.. இந்தக் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று பெயர் வெளிப்படுத்தாமல் ஒரு பக்தர் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.

இதுவே, “இந்தகோயிலுக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய நன்கொடை” என்று கன்ஹையதாஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.. மேலும், இக்கோயிலுக்கு முதல்வரின் உதவி நிதி மற்றும் பிரதமர் பராமரிப்பு நிதி ஆகியவற்றில் இருந்து 1 கோடியே 52 லட்சம் ரூபாய் உதவி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |