மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா சாமியார் ஆசிரமம் அமைத்து பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் தான், கொரோனா அவரது வாழ்க்கையிலும் பெரும் இடியாக அமைந்துவிட்டது. கொரோனா பரவும் விதம்?, எவ்வாறு பரவலை தடுப்பது? மக்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து மத்திய, மாநில அரசு எச்சரித்த போதும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அதனை சற்றும் கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி நம்பவைத்து வந்தார்.
இதையடுத்து கொரோனா அச்சதில் இருந்த அவரது பக்தர்கள் பலரும் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றனர். அப்படி வந்து சென்ற நபர்களில் எங்கிருந்தோ வந்த, யாரோ? ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவை பரப்பிவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற பக்தர்கள் குறித்து தீவிர விசாரணையை மத்திய பிரதேசம் மாநில சுகாதார துறையினர் நடத்தி வருகின்றனர். அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடிய கொரோனாவுக்கு எதிரான சவாலில் அஸ்லாம் பாபாவை வீழ்த்தி தனது வீரியத்தை கொரோனா காட்டி உள்ளது. அதோடு முடியவில்லை அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற நபர்கள் கொரோனா அச்சுறுத்தலால் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.