கோவில்களை திறக்க கோரி இந்து மக்கள் புரட்சி படை சார்பில் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோட்டில் மஹா மரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் இந்து மக்கள் புரட்சி படை சார்பில் கோவில்களை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் புரட்சி படை அமைப்பின் மாநிலத் தலைவர் பீமா பாண்டி, சத்ரபதி அறக்கட்டளை தலைவர் சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து பீமா பாண்டி கூறும் போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதே போன்று அனைத்து கோவில்களையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.