Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார்.

Image result for SR. Jangid

பின் தன் முதல் பணியாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்பியாக பணிபுரிந்து  அதிரடியாக முக்கிய பிரச்சனைகளை கையாண்டார். அதன்பின் நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார். ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொலை செய்து  கொள்ளையடிக்கும் பவாரியா கும்பல் 2001-ல் தமிழகத்தில் ஊடுருவி கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏவாக இருந்த சுதர்சன் உள்ளிட்டோரையும் கொலை செய்த பின், அதிரடியாக  ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

Image result for SR. Jangid

இந்த பவாரியா கொள்ளை உண்மை சம்பவத்தை வைத்து “தீரன் அதிகாரம் ஓன்று” என்ற திரைப்படம் கார்த்திக் நடிப்பில் வெளியானதை ஜாங்கிட் பாராட்டியுள்ளார். உண்மையான தீரன் இவர் தான் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.  படிப்படியாக உயர்ந்து டி.ஜி.பி.யாக ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினார். 34 ஆண்டுகள் பணிபுரிந்த சிறந்த சேவைக்காக 2 முறை குடியசுத் தலைவர் பதக்கமும், ஒருமுறை பிரதமர் பதக்கமும் மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை தமிழக முதல்வரின் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |