Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்தி , பூரிக்கு ஏற்ற சுவையான தால் கிரேவி!!!

தால் கிரேவி

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – ஒரு கப்

மஞ்சள்தூள் – 1/2  டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்

பூண்டு – 7  பற்கள்

எண்ணெய் – 3 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை –  சிறிதளவு

கறிவேப்பிலை  –  சிறிதளவு

உப்பு –  தேவையான அளவு

பூரி க்கான பட முடிவு

செய்முறை:

பாசிப்பருப்பை நன்றாக கழுவிக்கொண்டு இதனுடன்  மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும்  பச்சை மிளகாய்  ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் , சீரகம், அரைத்த பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.  அதில்  வேகவைத்த பருப்புக்கலவையையும்  தேவையான உப்பையும்  சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான தால் கிரேவி ரெடி!!!

Categories

Tech |