கடலைப்பருப்பு குருமா செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – கால் ஸ்பூன்
மல்லித் தூள் – கால் ஸ்பூன்
தேங்காய் – அரை முடி
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி -சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் – 4
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மிக்சி ஜாரில் தேங்காய் சோம்புவை போட்டுநன்கு அரைத்து கொள்ளவும்.
சேர்த்து அடுப்பில் குக்கரை வைத்து அதில் கடலைப்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து 3 அல்லது 4 வரும் வரை வேகவைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சூடான பிறகு, பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனை தொடர்ந்து வேகவைத்த கடலைப்பருப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
பின் அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கடலை பருப்பு குருமா ரெடி.