Categories
சினிமா

மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா….? ஹைதராபாத்தில் ட்விஸ்ட்…? வெளியான தகவல்…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருப்பதோடு, இருவரும்  ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தான். இவர்களின் விவாகரத்து தொடர்பில் பல கிசுகிசுக்களும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார்.

இதேபோன்று ஐஸ்வர்யா, ஒரு காதல் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஓட்டலில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விவாகரத்து தொடர்பில் தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரிராஜா, சமீபத்தில் தெரிவித்திருந்ததாவது, “குடும்பத்தில் வழக்கமாக நடைபெறும் சண்டை தான் இவர்களுக்கும் நடந்திருக்கிறது.

இதனால் அவர்களுக்குள் விவாகரத்து கிடையாது. ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் அறிவுரை கூறியிருக்கிறேன். எனவே, விரைவில் இருவரும் இணைவார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து முடிவை மாற்றி மீண்டும் இணைவார்கள் என்று பிரபலங்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். தற்போது இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |