திரை விமர்சகரான சுபாஷ் கே.ஜா, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்தால் ரஜினி அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில், விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். எனவே, இருவரின் குடும்பத்தினரும் அவர்களை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக ரஜினிகாந்த், மகள் மற்றும் மருமகன் இருவரையும் சேர்த்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் சுபாஷ் கே.ஜா இதுபற்றி தெரிவித்திருப்பதாவது, மகள் விவாகரத்து செய்து கொண்டது ரஜினி சாரை அதிகமாக பாதித்திருக்கிறது. இந்த பிளவு தற்காலிகம் தான் என்று அவர் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார். மேலும் தன் மகளிடம், கணவருடன் சேர்ந்துவிடுமாறு வலியுறுத்தி வருகிறார்.
பிரச்சினையை மறந்து விட்டு மீண்டும் இணைந்து வாழுமாறு இரண்டு குடும்பத்தினரும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.