கோவில்பட்டியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில் பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத வெற்றியும் பெற்றுள்ளார்.
ஜூலை 28 ஆம் தேதியான இன்று நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனுஷ் நகர தலைமை நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.