தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் போன்றோர் இப்படத்தில் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நடிகர் தனுஷ் இப்படத்திற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை பிரபல நடன இயக்குனர் ஜான் மாஸ்டர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூகவலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகின்றது.