தனுஷ் ஒரு மந்திரவாதி என்று பிரபல இயக்குனர் ட்விட் செய்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இத் திரைப்படத்தை பார்க்கும் பலரும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் கர்ணன் திரைப்படத்தை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அற்புதம், புத்திசாலித்தனம். கர்ணன் திரைப்படத்தை இப்படி தான் சொல்ல முடியும். மாரி செல்வராஜ் என்ன ஒரு அற்புதமான கதையை கூறியுள்ளார். தனுஷ் நடிகர் என்று நினைத்தேன். ஆனால் அவர் மந்திரவாதி என்று பதிவிட்டுள்ளார்.