தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் முன்னதாகவே பேசி வைத்து பிரிந்துள்ளதாக நட்ப்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்
தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வந்த நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில் ஐஸ்வர்யா தனது இணையதள பக்கத்தில் இருந்து தனுஷின் பெயரை நீக்கி விட்டார்.
மேலும் சமீபத்தில் இருவரும் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்டார்கள். அந்த பார்ட்டியில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பேசி விடுவார்கள் என்று நட்பு வட்டாரங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் போய் விட்டார்கள். இதனால் ஏமாற்றம் அடைந்த நண்பர்கள் இனி இவர்கள் சேர வாய்ப்பே இல்லை என்பது அன்று இரவு எங்களுக்கு தெரிந்து விட்டது என்றார்கள்.
ஏனென்றால் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா வளரட்டும் என்று காத்திருந்தார்கள். அவர்கள் வளர்ந்ததும் பேசி வைத்திருந்தபடி இருவரும் பிரிந்து விட்டார்கள் இதனால் இவர்கள் மீண்டும் சேருவது நடக்காத காரியம் என்று நட்பு வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.