நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷிற்கு “தி க்ரே மேன்”என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தனுஷ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ தான் இந்த படத்தையும் இயக்குகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தனுஷ் மூன்று மாதங்களை ஒதுக்கியுள்ளார். மேலும் ஹாலிவுட் நடிகர்களுடன் தனுஷ் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஒரு கொலை கும்பலின் தலைவனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது