Categories
சினிமா தமிழ் சினிமா

2021இல் கர்ணன்’…. ‘2024இல் சோழன்’….. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தனுஷ்….!!

2021 ஆம் வருடம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு இன்பமான வருடமாக அமைந்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக வந்த தகவல், அதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா படங்கள் குறித்த தகவல்கள், நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படம் குறித்த சில புகைப்படங்கள் என அடுத்தடுத்த சுவாரசியமான சினிமா தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், புத்தாண்டின் முதல் நாளான நேற்று தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. அதாவது, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் வெளியான காலகட்டத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும், காலப்போக்கில் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2024 எடுக்கப்பட உள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அப்படத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |