தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் வரை நடிக்க சென்ற ஒரே தமிழ் நடிகர் என்றால் அது தனுஷ் மட்டும்தான்.
தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் படங்களை தொடர்ந்து தனுஷ் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா ஷமிதாப் ஆகிய இரண்டு ஹிந்திப் படங்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.