சோனியா அகர்வால் நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்தார். தற்போது இவர் படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனையடுத்து, சோனியா அகர்வால் நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதன்படி, தனுஷுக்கும் எனக்கும் மிக முக்கியமான திரைப்படம் ”காதல் கொண்டேன்”. இந்த படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்கு காரணம் செல்வராகவன் தான். சில சமயங்களில் நினைத்த காட்சி வரவில்லை என்றால் அவர் என்னை கோபமாக திட்டி விடுவார். அந்த நேரத்தில் தனுஷ் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார். மேலும், நான் நிறைய டேக் எடுக்கும் போதெல்லாம் தனுஷ் மிகவும் பொறுமையாக இருந்தார் என சோனியா அகர்வால் மனம் திறந்துள்ளார்.