நகைச்சுவை நடிகர் யோகிபாபு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி 5-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின் தனது திருமணப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டு மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில்,’பரியேறும் பெருமாள்’ பட இயக்குர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தின் படபப்பிடிப்பில் கலந்துகொண்ட யோகி பாபுக்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து தனுஷ் தங்க செயினை பரிசாக வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்துள்ள முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ள யோகி பாபு, ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். யோகிபாபு நடிப்பில் வரும் மாதங்களில், மண்டேலா, கடைசி விவசாயி, வெள்ளை யானை, காக்டெய்ல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ளது.
Grt gesture by #Dhanush 👌👏@dhanushkraja gifted a gold chain to @iYogiBabu for his marriage, at the #Karnan shooting spot. pic.twitter.com/3FG3LPjKpL
— Kaushik LM (@LMKMovieManiac) February 11, 2020