Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷின் புதிய அவதாரம் … மலையாளத்திலும் அசுர வேட்டை ..!!

நடிகர் தனுஷ் தற்போது புதியதாக மலையாள படத்திற்கு பாடல் ஒன்றினை எழுதி , அவரே பாடி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி கால்த்தடம் பதித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ‘அசுரன்’, “என்னை நோக்கிபாயும் தோட்டா” , “பட்டாஸ்” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இந்த மூன்று படங்களும் வருகின்ற மாதங்களில் வெளியாக உள்ளது . இந்நிலையில் ,  முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதி உள்ளார் தனுஷ். குறிப்பாக, அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார்.

Image result for brothers day movie

இந்த பாடலுக்கு நாதிர்ஷா இசையமைத்துள்ளார். மேலும் “பிரதர்ஸ் டே” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு  பிருத்விராஜ், மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரயாகா மார்ட்டின், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிருத்விராஜ் 4 ஹீரோயின்களுடன் நடித்துள்ளார்.  ஏற்கனவே மலையாளத்தில் படம் தயாரித்துள்ள தனுஷ், தற்போது பாடலாசிரியராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |