Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தர்காவில் நடிகர் ரஜினி, ஏ.ஆர். ரகுமான் பிராத்தனை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன்  தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில நேரத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக சென்ற ரஜினி அந்த தர்காவில் ஏ.ஆர் ரகுமானுக்கான சிறிது நேரம் காத்திருந்தார். ஏ. ஆர் ரகுமானும் வந்தவுடன்  இருவருமே  தர்காவிற்குள் சென்று பிரார்த்தனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த ”பாபா”  திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்தார்.   தற்போது இந்த படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இருவரும் அமீன் தர்காவிற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |