Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி அரசு மருத்துவமனையில்… ஆண் குழந்தை கடத்தல்…!!!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினி. இவர் கடந்த 18ஆம் தேதி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நேற்று பிரசவ வலி வந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த மாலினி இன்று காலை கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது அவரது குழந்தை காணவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாலினி கத்தி கூச்சலிட்டு கதறி அழுதார்.

இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனை அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர்.  தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  விசாரணை செய்தனர். பிறகு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் அந்த குழந்தையை தூக்கி சென்றது அந்த பதிவில் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கடத்தி சென்ற பெண் குறித்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |