தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களிடம் பேசினார்.அப்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சிக்கின்றார்கள் சில துரோகிகள், அந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் அரசாங்கம்…
திரு ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் துணை நின்று கொண்டிருக்கிறது, துரோகிகளையும், எதிரிகளையும் தொண்டர்கள் துணை கொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர் கண்ட கனவு நிறைவேற்ற முடியவில்லை.
தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முடிந்து விடும் என்று எண்ணினார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அபரிவிதமான வளர்ச்சியை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே அமர்ந்து இருக்கலாம், ஆனால் தர்மபுரி மாவட்டம் அதிமுகவினுடைய கோட்டை.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் தர்மபுரியில் ஐந்துக்கு ஐந்தும் கூட்டணியோடு வெற்றி பெற்ற, ஒரு மாவட்டம் தர்மபுரி மாவட்டம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. ஆகவே வேண்டுமென்ற திட்டமிட்டு எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு எங்களை முடக்கி விடலாம் என்று ஒருபோதும் எண்ணி விடாதீர்கள் என தெரிவித்தார்.