பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது .
இந்த குற்றவாளிகள் 4 பேர் மீது தற்போது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது . மேலும் இந்த வழக்கு CBCID போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது . இந்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் இந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு பொதுமக்களும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் தர்ம அடி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
https://youtu.be/FALfnFpiCqU