நடிகை தர்ஷா குப்தா இணையத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர்.
நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார்.
மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அதில் அவரின், நெஞ்சு பகுதியில் டேட்டூ குத்தியிருப்பது தெரிந்தது. அதனை பார்த்த ரசிகர்கள், அந்த டேட்டூ, உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எனினும், சின்னத்திரை மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில், குடும்பப் பெண்ணாக நடித்துவிட்டு, தற்போது கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.