நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டு பிளிஸ்சிஸ் ,56 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை பற்றி உள்ளார்.
நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. குறிப்பாக டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் 6 போட்டிகளில் டு பிளிஸ்சிஸ், 2 முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்களை எடுத்திருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில், இவர் 56 ரன்கள் அடித்து விளாசினார்.
இதைத்தொடர்ந்து இவர் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் ,அரை சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் தவான், 265 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார் .தற்போது தவானை முறியடித்து, டு பிளிஸ்சிஸ் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார் .