Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியை சரமாரியாக திட்டிய ‘ராகுல் டிராவிட்’..! எதுக்கு திட்டுனாரு..? சேவாக்கின் ருசிகர தகவல் …!!!

முன்னாள் இந்திய அணியின் கேப்டனான ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பர படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  கேப்டனான ராகுல் டிராவிட் ஆடுகளத்தில் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டார். அவர் பொறுமைசாலி என்ற பெயருக்கு ,பெயர் போனவர். ஆனால் சமீபத்தில் வெளியான  விளம்பரம் படத்தில் அவர் காரில் அமர்ந்திருந்த படி, மற்றவர்களைப் பார்த்து கோபத்துடன் கத்துவதும், கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை  உடைப்பது போன்ற காட்சி ,அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் ருசிகர தகவலை  வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில் தோனி இந்திய அணிக்கு புதுவரவாக இருந்தார்.அந்த போட்டியில் விளையாடிய  டோனி ஷாட் அடித்தபோது , பாயிண்ட் திசையில் அவர் கேட்ச் ஆல் அவுட் ஆனார். அவுட்டாகி வெளியேறிய தோனியிடம் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், அவருடைய பொறுமை இழந்து தோனியை சரமாரியாக திட்டியுள்ளார். தோனியை திட்டிக் கொண்டு இருந்ததால் ,அந்த இடத்தை விட்டு நான் சென்றுவிட்டேன். இதன்பிறகு அடுத்த ஆட்டத்தில் விளையாடிய தோனி, பெரிதாக ஷார்ட் எதுவும் அடிக்காமல் நிதானமான ஆட்டத்தை ஆடினார். இதுபற்றி நான் தோனியிடம், உனக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தபோது ,அவர் நான் மீண்டும் கேப்டன் ராகுலிடம் திட்டு வாங்குவதற்கு தைரியம் இல்லை  என்று கூறினார்.

Categories

Tech |