Categories
கிரிக்கெட் விளையாட்டு

போடுறா விசில….. வா தலைவா…. வா தலைவா….. உற்சாகத்தில் தோனி ரசிகர்கள்…. காரணம் இதுதான்….!!

வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சென்னை வருகை தர இருப்பது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை  ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியும் பயிற்சி பெற வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி தமிழகம்  வருகை தர இருக்கிறார். முதல் 3 வாரங்களில் பயிற்சியை மேற்கொண்டு பின் 5 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு குடும்பத்தை பார்த்துவிட்டு, பின் போட்டி தினத்தன்று அணியில் இணைவார் என்று கூறப்படுகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் சென்னைக்கு வருகைதர இருப்பது தமிழக ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |