Categories
கிரிக்கெட் விளையாட்டு

கல்யாண வீட்டில் தோனி…! மனைவியோடு செம டான்ஸ்… வைரலாகும் வீடியோ …!!

திருமணவிழா ஒன்றில் கலந்து கொண்ட தோனி தன் மனைவியுடன் இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி கடந்த வருடம் அனைத்து சர்வதேச போட்டியில் விலகி ஓய்வு பெற்றார். தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக தன் காலத்தை மகிழ்ச்சியாக களித்து வருகிறார். இந்நிலையில் தோனி தன் மனைவி சாஷியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார்.

அங்கு இந்தி பாடலுக்கு இருவரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடியுள்ளனர். அதன்பின் அங்கிருந்த இளம் பெண்கள் தோனியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |