சென்னை அணியின் கேப்டன் தல தோனியிடம் ராஜஸ்தான் அணி வீரர்கள் புகைப்படம் எடுத்தும், ஆட்டோகிராஃப்பும் வாங்கிக்கொண்டனர்.
12வது ஐ.பி.எல் தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் விளையாடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வெற்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்ய அதன் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டோனி 46 பந்துகளில் 75* ரன்கள் (4 சிக்ஸர், 4 பவுண்டரி) விளாசி சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
அதன் பின் போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 46(26) ரன்கள் விளாசினார். இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னனை அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. இந்நிலையில் 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான கேப்டன் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டிக்கு பின்னர் இரண்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசி மகிழ்ந்த வேளையில் ராஜஸ்தான் அணியின் வீரரான 17 வயதுடைய ரியான் பாராக் CSK அணியின் கேப்டன் தல தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
The Calm after the win and the golden smile says it all! #Thala #WhistlePodu #Yellove #CSKvRR 🦁💛 pic.twitter.com/LIBoFWwtJn
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2019
அதன் பிறகு தோனியிடமும் ஜாலியாக பேசினர். அப்போது அந்த அணியின் மற்றொரு வீரரான ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கெளதம் தனது பேட்டில் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டார். இது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Some post-match banter after a Super win at the #AnbuDen last night! #WhistlePodu to the great comradeship across the squads! #Yellove🦁💛 pic.twitter.com/GIn5eRwPmo
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2019