Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ராணுவத்தில் தோனி… கிரிக்கெட்டில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து ஆணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்வியை விட தோனியின் ரன் அவுட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்விற்கு பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பில் கூறியதாவது, 

Image result for army dhoni

இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டிகளில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தோனி ராணுவம் தொடர்பான பணிகளில் ஈடுபட உள்ளதால் இரு மாத காலம் விடுப்பு கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தோனி தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் அணித் தலைவர் கோலி மற்றும் கேள்வி குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோருடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவத்தின் பேராசூட் பிரிவில்  தோனி கவுரவ லெஃப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |