நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.
இப்படி கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவருகின்றது. இருந்தாலும், தோனி எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் காத்திருப்பும்தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின் அவர் எவ்வித போட்டியிலும் விளையாடாமல் கிரிக்கெட்டை விட்டு சற்று தள்ளியே இருக்கிறார். ஒருபக்கம் பலரும் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
ஆனால், அவரோ தனது குடும்பத்துடன் நேரத்தை ஜாலியாக செலவழித்துவருகிறார். இதனால், தற்போதைய சூழலில் அவரை களத்தில் பார்ப்பதை விட சமூகவலைதளங்களில்தான் அதிகம் பார்க்க முடிகிறது.
அந்தவகையில், தற்போது மாலத்தீவுக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ள அவர், கடற்கரை ஓரத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடியுள்ளார். வழக்கம்போல தோனியின் ரசிகர்கள் அவர் வாலிபால் விளையாடும் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கிவருகின்றனர்.
.@msdhoni enjoys playing Beach Volleyball with his friends in Maldives.
Just one of Captain Cool’s way to workout even during holidays. ❤️😇#MSDhoni #Dhoni #MahiWay pic.twitter.com/bChyFV8mmv
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020