Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு வழிகாட்டி தோனி தான்”… எனக்கு பிடித்த பேட்ஸ்மேன்… புகழாரம் சூட்டிய பந்த் !

தோனி தான் எனக்கு சிறந்த வழிகாட்டி என இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கின்றார். இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பராக இருந்த இளம் வீரர் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளாலும் அழுத்தத்தினாலும் ரிஷப் பந்தினால் விக்கெட் கீப்பராக ஜொலிக்க முடியவில்லை. இந்திய அணியின் முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், ரெய்னா, விராட் கோலி போன்றவர்கள் ரிஷப் பந்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.

இந்நிலையில் தனது ஐபிஎல் அணியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நேரலையில் பேசினார் ரிஷப் பந்த். அதில் தோனி குறித்து பேசிய அவர் “வெளியிலும் சரி களத்திலும் சரி தோனி தான் எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். எப்போது எனக்கு பிரச்சனை வந்தாலும் அவரையே முதலில் அணுகுவேன் பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவதற்கு சில ஆலோசனைகளை மட்டுமே கொடுப்பார். ஆனால் எப்பொழுதும் நிரந்தரத் தீர்வை கொடுக்கமாட்டார்.

அவர் கொடுக்கும்ஆலோசனைகளால் எனது பிரச்சினையை நானே தீர்த்துக் கொள்ள முடிகின்றது. நான் முழுமையாக அவரை சார்ந்து இருக்கக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருப்பார். இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங் பார்ட்னர் தோனிதான். சில போட்டிகளில் மட்டுமே அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்துள்ளேன். அவர் கிரீசில் இருந்தாலே பேட்டிங் குறித்த கவலை நாம் பட வேண்டியதில்லை. காரணம் அவர் வைத்திருக்கும் திட்டங்களே நம்மை சரியாக வழிநடத்தும்” என தெரிவித்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |