ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தல தோனி நிகழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 (37) ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் தல தோனி தனி ஒருவராக கடைசி வரை போராடினார். இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட தல தோனி 24 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த போட்டியில் தல தோனி 48 பந்துகள் 84* ரன்களுடன் (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை தோனி நிகழ்த்தினார். தல தோனி மொத்தம் 203 சிக்ஸர் அடித்துள்ளார்.